Sunday, November 30, 2008

சென்னை மூழ்கியது ஏன்?



இது 1893 வெள்ளக்காரன் வரைந்த சென்னை மேப். இதில் பழைய சென்னை மேப்தான் உள்ளது இன்றைய பறநகர் பகுதி இல்லை இருந்தாலும் பழைய சென்னையின் ஏரிகள் பல காணாமல் போயிருப்பதின் ஆதாரம் இது. குறிப்பாக தி.நகர், மாம்பலம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் ஏன் சிறிது மழை பெய்தாலும் ஏரியாகி விடுகிறது என்பதன் புவியியல் இதிலிருந்து விளங்கும். ஆனால் இதன் அரசியலை விளங்கிக்கொள்ள படியுங்கள் வினவின் வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம் !

8 Comments:

Indy said...

So, you want Chennai to be a village than being a city.

Anonymous said...

வினவு! வினவு!! வினவு!!

Jackiesekar said...

இது 1893 வெள்ளக்காரன் வரைந்த சென்னை மேப். இதில் பழைய சென்னை மேப்தான் உள்ளது இன்றைய பறநகர் பகுதி இல்லை இருந்தாலும் பழைய சென்னையின் ஏரிகள் பல காணாமல் போயிருப்பதின் ஆதாரம் இது. குறிப்பாக தி.நகர், மாம்பலம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் ஏன் சிறிது மழை பெய்தாலும் ஏரியாகி விடுகிறது என்பதன் புவியியல் இதிலிருந்து விளங்கும்.


உண்மைதான்

வலைஞர்! said...

வாங்க இன்டி நான் இங்கு தந்திருப்பது ஒரு பொது தகவல். வளர்ச்சி என்ற பெயரில் நமது நீர் நிலைகள் காணாமல் போனதற்கான ஆதாரம். அவ்வளவே. திநகரும் மாம்பலமும்தான் சிடி என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Anonymous said...

1893 வெள்ளைக்காரன் வரைந்த மேப்பை விடுன்ங்க. 40 / 50 வருஷம் முன்னாடி இருந்த மேப்பை பார்த்தாலே, சென்னை புற நகரை சுற்றி இருந்த பல ஏரிகள் காணமல் போனது தெரியும். ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்பட்ட மாவட்டம் இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பது எத்தனைப் பேருக்குத்தெரியும்.

Anonymous said...

//So, you want Chennai to be a village than being a city.//

மிகவும் முட்டாள்தனமான ஒரு பின்னூட்டம்.

இவர் சென்னை தவிர வேறு நகரங்களுக்கு சென்றதில்லை என்று நினைக்கிறேன். லண்டன் போன்ற பெருநகரங்களில் நகரின் ஊடே சிறிய ஏரிகள், பூங்காக்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படு வருகின்றன. இவைகள் நகரை குழுமையாகவும் தூய்மையாகவும் வைத்துகொள்ள உதவுகின்றன.

இது சென்னையில் தொலைந்துபோனதற்கு காரணம் அரசியில் மற்றும் சுயநல வியாதிகளின் குறுகிய கண்ணோட்டம்தான்.

Anonymous said...

//So, you want Chennai to be a village than being a city.//

இனய்யா இப்பிடி நினைக்கிறீர்கள்? எங்கள் விருதுநகரில் வெகு விரைவாக கட்டிட வளர்ச்சிகள் ஏற்பட்டு நகர் விரிவடைந்து கொண்டே சென்றாலும் நகரின் மையப்பகுதியில் அந்தக்காலத்தில் தோண்டி வைத்த மாபெரும் தெப்பக்குளம் ஊருக்கே நீராதாரமாக விளங்குகிறது. நகரில் துளி மழை பெய்தாலும் அது தெப்பக்குளத்தில் வந்து விழும்படி வடிகால் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். நகரின் மையப்பகுதியில் வர்த்தக வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று உங்களைப் போன்ற புத்திசாலிகள் அதை மூடிவிட்டு கடைகளைக் கட்டிவிட்டால் வெளங்குமய்யா.. விருதுநகர் நாசாமாப் போகும், சென்னை போன மாதிரி.

Anonymous said...

வலைஞரே நேத்து நம்ம குப்பண்ணா திநகர் விவசாய நிலமான்னு மடக்கினாரு. நீங்க திநகர் நிலமே இல்ல தண்ணீர்தான் என மேப்ப போட்டு அவர கவுத்து போட்டுடீங்க.
மனுசன் இன்னும் திரும்பி வரல.
அரசியல்வாதிங்கள திட்டிட்டு திருப்தி பட்டுக்கற மக்களை உங்க மேட்டர் வேற திசையில பாக்க தூண்டுவதா நான் கருதரேன். உங்க சொந்த சரக்கும் நல்லாத்தான் இருக்கு...நிறைய எழுதுங்க.
ஜனங்களே இது மகுட மேட்டர் மானாவாரியா ஓட்ட குத்துங்க ஆனா மைனஸ குத்திடாதீங்க...